யாழினி வெங்கடேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யாழினி வெங்கடேசன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  24-Jan-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Nov-2014
பார்த்தவர்கள்:  338
புள்ளி:  109

என்னைப் பற்றி...

வழிகாட்டுதல் யாரும் இல்லை... என் வழியில் யாரும் இல்லை.... என் கிறுக்கல் எல்லாம் கவிதை ஆக்குகிறேன்... உன் கடைக்கண் பார்வையின் முன்னால்....

என் படைப்புகள்
யாழினி வெங்கடேசன் செய்திகள்
யாழினி வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2015 7:24 pm

தொலைத் தூரத்தில்
உன் குரல் கேட்டு விழித்தெழும்
என் இதயத்திற்கு எப்படி சொல்வேன்
என் அருகினில் நீ இல்லை என்று....
மறக்கவும் இல்லை
மறுக்கவும் இல்லை
அப்போது உன் காதலை
இப்போது உன் பிரிவை

மேலும்

அழகு.. 16-Mar-2015 9:52 pm
ம்ம்ம்...நல்லா...உற்று கவனிங்க,,,!! அது..தொலை தூரத்தில் கேட்ட குரலா..!? அல்லது.. உங்கள் இதயத்தின் உள்ளேயிருந்து கேட்ட குரலா..? 16-Mar-2015 9:17 pm
வரியில் உணர்ந்தேன் காதலின் வலிகளை.......காத்திருங்கள் பிரிவும் சுகமானதே உண்மையாய் காதலித்து இருந்தால் ..... 16-Mar-2015 8:00 pm
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) munafar மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 9:15 pm

பெண்கள் உடை கண்டாலே ஆணுறை
தேடும் ஆண்மை கொண்ட விலங்குகளே
உறுப்புகளுக்காக உணர்வு இழக்கும் மிருகங்களே

இந்து முஸ்லிம் கிருஸ்துவம்
மதப் பெயரில் மாய்த்து கொண்டீரே
ஆயினும் ஏனடா காம கலியாட்டத்தில் சமத்துவம்


வெட்கம் அற்ற பதர்களே!
பெண் சிலை காணினும் சபலம் கொள்ளும் அற்பனே!

தன் பாட்டிப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் தாய்ப் போல் பெண்டீரை சீண்டினாய்
தன் சகோதரிப் போல் பெண்டீரை சீண்டினாய்

விடுத்தோம் மறந்து தொலைத்தோம்
நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வரிகள் காண நேருகையில்

ஏனடா மானுடா உன் மகளாய் துள்ளித் திரியும்
சிறு க

மேலும்

அருமை இறுதி வரிகள் மிக அருமை 20-Jun-2017 1:07 am
nalla sonninka .அற்புதம் 14-Apr-2015 4:22 pm
நன்று நண்பா!!!!!!!!!!!!! 08-Apr-2015 3:08 pm
நல்ல படைப்பு ! வரிகளில் இன்னும் சற்று வலி இருந்திருக்கலாம் ! வாழ்த்துக்கள் ! 25-Mar-2015 7:19 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
யாழினி வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 7:28 pm

என் மவுனம் உனக்கு புரியாது
புரிய நீ முயற்சிப்பதும் நலமாய் இருக்காது
*****
மனமென்ற மவுனம்
என்னை கொல்லாமல் கொல்கிறது
*****
கடந்த கால நினைவுகளை அசைபோட்டு
மனம் மட்டுமே ரணமாக
உணர்வுகள் சிதைக்கப்படும் தருணம் இது...!
*****
என் மக்களுக்காய் நான் எதிர் நோக்கி அமர்ந்திருக்கும்
இந்த முதியோர் இல்ல வாசலில்...!

மேலும்

படித்தேன் ரசித்தேன் தொடருங்கள் 06-Mar-2015 11:50 am
மனம் கனக்கச் செய்யும் வரிகளும் அவர்களின் வாழ்கையும்... 06-Mar-2015 1:50 am
யாழினி வெங்கடேசன் அளித்த படைப்பில் (public) leninn மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2015 2:23 pm

இரத்தம் உறையும் தமிழீழ
சரித்திரத்தின் கடைக்குட்டி நான்.....!

நீதி கேட்டோர் அநீதியாய் சாகடிக்கப்பட்டனர்...!

ஆயிரம் கோடி மானுடத்தின் உடம்பில்
ஓடும் சிவப்பு திரவம் தானடா
உன்னிலும் அது என்னிலும் ஓடுகிறது....!

தாயையும், தந்தையையும் பறிகொடுத்து
அண்டைய தேசத்தில் அகதிகளாய்.....
பிடி சோற்றிக்காய் பிச்சை எடுக்கின்றோம்......!

உடன்பிறந்தோரை உறுக்குலைத்தப் போதும்கூட
உயிர்காக்க ஒடி ஒளியும் கோழைகளாய் நாங்கள்.....!

தமிழன் என்ற வீரம் மனதினில் நிற்க ......
தமிழனாய் பிறந்ததாலோ என்னவோ ......
தமிழனுக்கான நீதியும்
தாமாதமாய் அல்லவா கிடைக்கிறது....!

மேலும்

நன்றி தோழரே 04-Mar-2015 9:22 pm
நன்றி தோழமையே 04-Mar-2015 9:22 pm
நன்றி தோழமையே 04-Mar-2015 9:22 pm
நன்றி தோழமையே .... 04-Mar-2015 9:21 pm
யாழினி வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 6:57 pm

பல ஆயிரம் கேள்விகள் என்னுள்....!

அன்புக்கு தெய்வம் என்ற பெயருண்டு அம்மா சொன்னாள்....!

அத்தெய்வத்தினை வணங்குதலில் பிரிவினை கண்டோம்...!

கோவில்களில் கூட எளியோரை ஒதுக்கி வலியோரை வணங்கினோம்...!

பரிணாமத்தின் புதுவரவு பணத்தினில் மோகம் கொண்டோம்...!

காகிதத்தில் கொண்ட பற்றினை மனிதத்தின் மேல் வைக்க தவறினோம்...!

இவ்வாறு அடுக்கடுக்காய் என்னுள் ஆயிரம் கேள்விகள்....!

விடைதேடும் பொழுதினில் "நீ மட்டும் விதிவிலக்கா" என்ற கேள்வி என்னையும் கேட்டது எனதுள்ளம்....!

மேலும்

இங்கு கேள்விகள் ஆயிரம் ஆயினும் பதில் தான் கிடைக்கவில்லை .......... 05-Mar-2015 6:10 am
நல்ல படைப்பு நட்பே .. 05-Mar-2015 2:02 am
யாழினி வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 2:23 pm

இரத்தம் உறையும் தமிழீழ
சரித்திரத்தின் கடைக்குட்டி நான்.....!

நீதி கேட்டோர் அநீதியாய் சாகடிக்கப்பட்டனர்...!

ஆயிரம் கோடி மானுடத்தின் உடம்பில்
ஓடும் சிவப்பு திரவம் தானடா
உன்னிலும் அது என்னிலும் ஓடுகிறது....!

தாயையும், தந்தையையும் பறிகொடுத்து
அண்டைய தேசத்தில் அகதிகளாய்.....
பிடி சோற்றிக்காய் பிச்சை எடுக்கின்றோம்......!

உடன்பிறந்தோரை உறுக்குலைத்தப் போதும்கூட
உயிர்காக்க ஒடி ஒளியும் கோழைகளாய் நாங்கள்.....!

தமிழன் என்ற வீரம் மனதினில் நிற்க ......
தமிழனாய் பிறந்ததாலோ என்னவோ ......
தமிழனுக்கான நீதியும்
தாமாதமாய் அல்லவா கிடைக்கிறது....!

மேலும்

நன்றி தோழரே 04-Mar-2015 9:22 pm
நன்றி தோழமையே 04-Mar-2015 9:22 pm
நன்றி தோழமையே 04-Mar-2015 9:22 pm
நன்றி தோழமையே .... 04-Mar-2015 9:21 pm
யாழினி வெங்கடேசன் - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2015 11:20 pm

தங்க ரதமே !

பேரழகி உன் சிரிப்பால்
ஒரு படி உயர்ந்து செல்கிறாய்
பல மனதை வெற்றி கொண்டு
இதயத்தில் இடம்பிடித்ததால் ~~~~~!

ஒப்பற்ற உன் உள்ளம் தான்
உப்பற்ற மனித வாழ்வை
சுவைக்கச் செய்கிறது
சுதந்திரமாய் வாழ ~~~~~~~~~~~~~~~!

உன் கள்ளப் பார்வையில்
உச்சியும் குளிர்ந்து
உதிரமும் சிவந்து
திருப்தி அடைகிறது -உன்னிடம்
திருடு போன மனமும்~~~~~~~~~~~!

உன் பேச்சும் விடியலை
துயில் கொள்ள வைக்கின்றது
மிகவும் சுலபமாக
தென்றலை வருடிய படி~~~~~~~~~!

ஏகாந்த வாழ்க்கையும்
வீண் தான் இவளைப் போன்ற
கொடி முல்லையின்
செல்லக் கொஞ்சலுக்கு முன் ~~~~!

எழில் மிகு இவள் நடை
எண்ணங்களை இவளுக

மேலும்

அழகான அற்புதமான படைப்பு கீது.....! 07-Jan-2015 4:28 pm
வரிகள் எல்லாம் அழகு .. வாழ்த்துக்கள் ... 06-Jan-2015 7:41 pm
அருமையான வரிகள் தங்கைகோர் கவிதை தங்கையின் படைப்பு 04-Jan-2015 1:11 pm
அருமை பதிவு 03-Jan-2015 7:36 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Dec-2014 12:14 am

விரல்கள் தழுவ
இதழ்கள் உலவ
இன்னிசை பாடும் புல்லாங்குழல்....

மூங்கிலின்
கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த தாகம்...

முணுமுணுத்தவாறே
பிறப்பெடுக்கிறது
புல்லாங்குழலில் காதல் ராகம்...

காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?

எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......

இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...

இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...

அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....

நான் காதல்
வழி கேட்டு வந்தால்
நீ வலி கூட்டி செல்வாய்...

மேலும்

இடையில் மானே தேனே கிடையாதா ,,,,,,,,,,,அருமை 03-Mar-2015 1:48 am
ஆமாம் தோழரே..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி...! 09-Jan-2015 7:55 pm
இதய அறை கர்ப்பம் தரித்து என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின... அடடா!!! அவ்வளவு காதலா? 09-Jan-2015 6:18 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ப்ரியா...! 06-Jan-2015 8:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

சரண்ராஜ்

சரண்ராஜ்

சென்னை
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )

இவர் பின்தொடர்பவர்கள் (43)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (44)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

பிரபலமான எண்ணங்கள்

மேலே