கல்லறை செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கல்லறை செல்வன்
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  13-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2014
பார்த்தவர்கள்:  3937
புள்ளி:  220

என்னைப் பற்றி...

நான் வாழும்கல்லறை

என் படைப்புகள்
கல்லறை செல்வன் செய்திகள்
கல்லறை செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2024 10:48 pm

இறைவா என்று வணங்கிடத்தான் நினைக்கிறேன்
இறைநிலை தெரியாமல் கண்மூடி வணங்க, மனமற்று போகின்றேன்.

என்னுள் இருக்கும் அனைத்தையும் ஆராயச் செய்தாய் இறைவா,
உன்னை நானும் எங்கென ஆராய்வேன்,

நீ இல்லை என்பது எந்த ஆராய்ச்சியாரின் கூற்றோ
இருக்கிறாய் என்பது எந்த ஆன்மிகவாதியின் கூற்றோ
நான் அறியேன்

உன்னையும் என்னை அறியச்செய்வாய் என்னையும் மனிதனென்று உலகில் வாழச்செய்வாய்...
-அருள்

மேலும்

கல்லறை செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2024 10:43 pm

காமம் கண்டு காய்ந்தனவோ!
உயிரின் துகள் உயிர்கொல்லி ஆகுமெனின் காமம் என ஆகாது நண்பா...

துணையின் தலையசைவில் பூக்கும் உயிர்ஜீவி உனையும் மனிதனாக்கும்

கானகத்தே ஆணகம் காணலாகுமெனில் கண்ணே காதல் என்றோ காமம் என்றோ
பிரித்துறைத்தல் முடியாது

தேடிய துணை உனை தேவதையாய் பார்க்கவேண்டாம் தேவரடியாள் என்று ஆக்காமல் வாழ்ந்துவிட்டால் போதும் வாழ்க்கை உனக்கானதாக இருக்கும்

உடல்பசி உயிர்பசியாக மாறுமெனில்
அது பரிணாம வளர்ச்சியல்ல
மனிதனாக வாழும் அரக்கர் குணம்

காமம் அழகானது காமம் தவறாதே ஆசைக்கு இசைந்தால் அடிமையாக வாழக்கூடும்

வாழ்க்கை தெளிவான பாதையைக் காட்டும் வாழ்ந்து காட்டு
வாழ்த்துகள்...

மேலும்

கல்லறை செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2024 9:55 am

எனக்கும் ஆசைகள் தான்
நீ வாழ்ந்து கழித்த நிகழ்வுகளை எல்லாம் நானும் காணலாகாதா?

கண்ணில் தோன்றிய சில கனவுகள்
என் எதிர்காலம் பார்த்த கண்ணாடி எல்லாம் என் கண்முன்னே உடைத்து நொறுக்கியதை கண்டேனே
உன் போல் நானும் வாழ்ந்திடல்க்கூடாதா?

தெரிந்து செய்தாயோ!
தெரியாமல் செய்தாயோ! நின்றன்
செய்தொழில் பாவமன்றோ?
நானும் வாழ்ந்தொழியக் கூடாதா?

எனக்கும் மனமுண்டு
எனக்குள்ளும் இன்பம் தும்பம் இரண்டும் உண்டு
அவையெல்லாம் உன்னிடத்தே பகிர்ந்தேனே! நானும் உன்போல் வாழ்ந்திடல் கூடாதா?

எதில் தோற்றுப் போனாலும்
எனைத் தேற்ற நீயிருந்தாய்
என்றெண்ணியே வாழ்ந்தேனே
உன் போல்
நானும் வாழ்ந்திடக்கூடாதா?

மேலும்

கல்லறை செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2024 12:26 am

நீ பார்க்கும் உலகை விட்டுவிட்டு
உனைப் பார்க்கும் உலகைத் தேடு
கிட்டப் பார்வை எட்டப் பார்வை நோயில்லாப் போதினிலும் உன் பார்வை உந்தன் இலக்கை மறைந்தது ஏனோ?
கண்பார்வை கனவுப்பாதை பார்க்காவிடில் நம்பார்வை ஆசையெனும் குறுவட்டப் பாதைக்குள்ளே பேரோட்டம் ஓடுமடா, அமைதியான வாழ்வுதன்னை அசையாமல் தேடாதே! ஓய்வுகாலம் வந்தாலும் அமைதி உன்னை நாடாதே! ஓடும் வாழ்க்கை உன்னோடு நடைபயிற்சி கொள்ளாது! உன் வாழ்க்கை உன் கையில், நீ
ஓடுவதையும் ஒதுங்குவதையும்
உன் தேடலே நிச்சயிக்கும். நானென்னசொல்வது நீயென்ன வாழ்வது
உன்வாழ்க்கை உன்கையில்
பாதை மட்டும் மாறாதே! என் தோழா மற்றவை உன்னைவிட்டு போகாதே!!!

மேலும்

கல்லறை செல்வன் - கல்லறை செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2024 1:30 pm

பாலைவனத்திலும் பூக்களுண்டு
பாவை அணைத்திடும் பணியுமுண்டு
முள்ளுடை கள்ளிக்கும் கனிகளுண்டு
கல்லுடை மனதிற்கும் காதலுண்டு
காவிரி காண மறுப்பதினால் காய்ந்தவையெல்லாம் பாலைவனம் தான்

கனகம் தேடும் காளையரில் காண்பவையெல்லாம் காமமடி
குனகம் பாரும் உலகினிலே
நானும் யாருமற்ற நரகத்திலே...
தனிமைச் சுடும் போதினிலே
கவிதை தந்த ஆதரவில்
கவலை மறந்து போகிறேனே....

மேலும்

நன்றி 16-Jan-2024 4:12 pm
வரிகள் என்னை கவர்ந்தது தொடர்ந்து எழுதுங்கள் 16-Jan-2024 3:11 pm
கல்லறை செல்வன் - Mohammed அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2022 10:16 pm

Agambavam enra sollai pirittu ezhudu

மேலும்

அகம் + பாவம் 13-May-2022 8:40 pm
அகம் +பாவம் 05-May-2022 1:48 pm
அகம்+பாவம் 22-Apr-2022 7:29 pm
அகமை+பாவம் 31-Mar-2022 3:54 pm
கல்லறை செல்வன் - கல்லறை செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2021 2:23 pm

தங்கமே
உனை நான் தவறவிடமாட்டேனே..
பொங்கும் புன்னகையை
உனக்காய் நான் அள்ளித்தருவேன்...
போகும் பாதையிலும்
உன் பாதம் தேடிச்செல்வேன்...
பொன்னும் கண் முன்னே
பாவையென நின்றிருப்பின்
மின்னும் உன் பார்வைதனில்
மயங்கியே நானிருந்தேன்...
தின்னும் கனவினிலும்
தீதாம் கலவி என்றேன், ஆயினும்
எனை தீண்டிய பொழுதெல்லாம்
உனை வேண்டியே நானிருந்தேன்..
விண்ணை விலகிநிற்கும்
கரைந்துவிட்ட வெண்நிலவும்
கண்ணே, கலங்காதே
உன்னை நானும்
விலகிச்செல்லமாட்டேனே
மண்ணுள் மடிந்தாலும்
மின்னல் விழும் மரமாய்
இருந்தாலும்
உன்னுள் நானிருப்பேன்...
உனை விடமாட்டேனே!!!
எனை கொன்று தீர்த்தாலும்...
உனைவிடமாட்டேனே

மேலும்

மிக்க நன்றி உங்களின் வாழ்த்தை வேண்டி இன்னும் பல படைப்புகள் தருவேன் நன்றி 12-Jul-2021 7:05 am
Super vaazthukkal innum arumaiyana pataipukkalai thaarukal 06-Jun-2021 8:40 am
கல்லறை செல்வன் - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2021 12:52 pm

அன்றொரு நாள்
கீழ்வானில் எழுந்தவன்
தன் சுடர்விழிப் பார்வைகளால்
கொஞ்சம் சுட ஆரம்பித்த நேரம்
ஓர் ஓட்டு வீட்டின் எதிர் சாலை ஓரம்
சிறு தூரத்தில்
மழைதரும் கார்முகில்
இப்ப வருமோ? எப்ப வருமோ? என்று
வான் பார்த்த நிலம்போல்
நான் காத்திருந்தேன்.,

அவ்வழி வந்தவர்களில்
எனை அறிந்தோர்
ஏன்? இங்கே என்று
தொல்லை செய்து நகர்ந்தார்கள்
அறியாதோர்
நமக்கு ஏன்? தொல்லை என்று
எனைக் கடந்தார்கள்.,

எங்கோ? ஓர் இடத்தில்
மழை வரப் போவதை
என் தேகத்திற்கு
விசிறி வீச வந்த தென்றல்
குளிர்வழி
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது
வானம் என்ற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
எடுத்துக் கொண்டு
பூமியோடு சேர்த்து எனக்கும் சேர்த்தான்.,

இதுபோல் எனக்கு

மேலும்

என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே 27-Aug-2021 11:04 am
அருமை 23-Apr-2021 9:47 am
கல்லறை செல்வன் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2020 8:17 am

சோலையில் இருப்பது மலர்
சேலையில் இருப்பவள் மலர்

தலையில் சூடுவது
தலைவியாக சூடுவது

மலருக்கு சிறு ப்பூ அழகு
மலருக்கு சிரிப்பு அழகு

தேன் ஈ சுற்றினால்
அது மலர்
ஆண் ஈ சுற்றினால்
அவள் மலர்

பன்னீர் சிந்துவது
கண்ணீர் சிந்துவது

கனியாவது
கன்னியாவது

இருவருக்கும் உண்டு
மணம்.

இருவரின் முகவரியும்
இதழே

இருவரின் பெயரும்
பூவை

இருவருக்குமே ஆதாரம்
கொடியிடை

இருவரும் விரும்புவது
மாலை

இருவருக்கும் சொந்தம்
அழகு

இருவரின் முகங்களும்
மலர்கிறது
கதிரவனின் வருகை

இருவரும் பிறரால்
பறிக்கப்படுபவர்கள்

மேலும்

அருமையான படைப்பு இன்னும் எழுதுங்கள் என்றும் உங்கள் வாசகனாக பயணிக்க விரும்புகிறேன் .... 20-May-2020 10:57 am
கல்லறை செல்வன் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2019 11:24 am

நினைவுக்கும் பெரும்
வலிமை உண்டு/
நடத்தி முடி அதனைச்
செயலாய்க் கொட்டு/

கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/

முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/

சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/

மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம்
மறந்திடும் என்றும்/

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 19-May-2020 5:45 pm
தாமதமான பதில் மன்னிக்கவும் நன்றி அண்ணா 😊 18-May-2020 12:49 pm
அழகான சிந்தனை... வாழ்த்துகள் கவிதாயினி காலா.... 09-Feb-2020 8:08 am
கல்லறை செல்வன் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2020 1:54 pm

சித்திரை மாதந்தனில்
சிந்தையும் குளிர்ந்ததோ !
நித்திரைப் பொழுதினில்
நித்தமும் சொப்பனமோ !

கனவில்வந்த காதலனும்
கட்டியணைக்க வாரானோ !
தீட்டியுள்ள திட்டங்களும்
தீஞ்சுவையாய் இனிக்குமோ !

ஆலிங்கனம் புரிந்திடதான்
ஆழ்மனதும் துடிக்கிறதோ !
ஆறப்போட மனமின்றி
ஆசைகளும் கூடுகிறதோ !

தவித்திடும் உன்நெஞ்சம்
தணிந்ததும் துள்ளிடுமோ !
உறக்கத்தில் வந்தவனும்
உன்னவனாய் மாறுவானோ !

பழனி குமார்
09.05.2020

மேலும்

மிக்க நன்றி தோழரே 11-May-2020 9:54 pm
அருமை அருமை முரணில் தொடங்கி வரன் இல் முடிந்தது 11-May-2020 4:34 pm
மிக்க நன்றி சகோ 11-May-2020 7:07 am
மிக்க நன்றி சகோ 11-May-2020 7:07 am
கல்லறை செல்வன் - கல்லறை செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2020 2:21 pm

இளமை தூக்கி எரிந்த கல் நான்,
வறுமை வளர்த்தெடுத்த மரம் நான்,
சோகம் சோதித்த இன்பம் நான்,
தனிமை தத்தெடுத்த சமுகம் நான்,
நான்,

பனி போர்த்திய பாறையிலும்
அனல் கொலுத்தும் பாலையிலும்
புனல் இல்லா போதினிலும்
புல்வெளி மீதினிலும்
பொழுதைப் போக்கி போகின்ற
மதிகெட்ட மானிடரில்
நானும் பல கனவின்
பொதி மூட்டையாகின்றேன்.

பிரிந்த காதல், -அதில்
எரிந்த இதயம்,
கல்லூரி காலம்,
கண்ணில் வரும் கனவு,
பள்ளிப் பருவம்,
பாதை தந்த பயிற்சி,
யாவும் எந்தன் மனதில்
எளளிநகைத்து போகயிலே

உற்றவர் உறவினர்
உயிர்விடும் போதினிலும்
பெற்றவள் மூப்பினிலும்
என் தங்கை வலைகாப்பினிலும்
என் பங்கென்றே பணமொன்றே வாழுதடா...
என்ன பாவம் செய்தேனோ

மேலும்

நன்றி கவிஞரே.. உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.... மனம் மகிழ்ந்தேன்... 19-May-2020 5:30 pm
நன்றி அய்யா.. உங்கள் கருத்தை எண்ணி நான் மிகவும் இன்புறுகிறேன்... நன்றிகள் ஆயிரம் 19-May-2020 5:28 pm
நன்றி சாரல்,,, நான் விரும்பும் கவிஞரே.... தமிழ் நதியின் கவிச் சாரலே... தலை வணங்குகிறேன் உமக்கு ... மனமுவந்த கருத்தை தந்துள்ளீர் மிக்க நன்றி ,... 19-May-2020 5:26 pm
நன்றி அய்யா... உங்களின் ஊக்கத்துடன் இன்னும் எழுதுவேன்... நன்றி கவிஞரே... 19-May-2020 5:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (75)

இவர் பின்தொடர்பவர்கள் (83)

karthikjeeva

karthikjeeva

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (78)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சந்திர மௌலி

சந்திர மௌலி

காஞ்சிபுரம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே