jayakumari - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : jayakumari |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 05-Jul-1976 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 516 |
புள்ளி | : 59 |
தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உண்டு. இந்த இணையத்தின் முலம் பல படைப்புகளை படிக்கவும், எனது சில படைப்புகளை இந்த
இணையத்தில் வெளியிடவும் விரும்பி இணைந்துள்ளேன்.
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
விரலிடுக்கில் பிடித்து
ஒரு முனையில் தீ மூட்டி
மறுமுனையை பற்றி
உதடுகளில் பொருத்தி
உயிரை உறிஞ்சி
சிறிது சிறிதாய் உருக்கி
இறுதியில்
காலடியில் மிதித்து நசுக்கி
அலட்சியமாய் புகை கசிய
நடந்தாயே...
நண்பா...!
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்."
என்னும் திருக்குறளை
நீ அறிவாயா..?
அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....
பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....
இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட
மூன்றுக்காறென்ற
முறையான அளவில்
வெட்டப்படும்
உன்னைக் கேட்காமல்
உனக்கொரு வீடு
கட்டப்படும்!
பளிங்கு மாளிகை
பல இருந்தாலும்-இறுதியில்
பதுங்கும் குழி
சவக்குழி!
கதவு சன்னல் கிடையாது
பூட்டும் வீடு திறக்காது
சாவி இல்லாத வீடு
காற்றும் புகாத வீடு!
எறும்பண்டாத
எண்சான் உடம்பை
மண்ணும் கறையானும்
மாறி மாறி உண்ணும்!
உண்ணும் பிராணியாய்
உயிர் வாழ்ந்தவன்
உண்ணும் உணவாய்
உள்ளே கிடக்கிறாய்!
ஆட்டமாய் ஆடி
அடங்கிய பின்
கூட்டமாய் வந்து அடக்கிட
வந்திடும் அமைதி
அது தான் சமாதி!
உள்ளே வைத்த பின்
விரைந்து மூடுவது
எழுந்திடுவாய் என்பதற்கல்ல
நாங்கள் விரைந்திட!
வெளிப் பார்வைக்கு
உன
அன்பானவர்களின் அன்பை
இழந்த அனைவருமே
அனாதைகள்தான்...!!!
(கணிணி தேவதைகளுக்கு ஒரு கவன ஈர்ப்புக் கவிதை)
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும்
பூமிக்கு வந்த
புதுமைப் பெண்களே..!
அடுக்களை விலங்கினை
காலிலிருந்து கழற்றி விட்டு
அலுவலக விலங்கினை
கழுத்தில் மாட்டியிருப்பதை
நீ அறிவாயா ?
அன்றும் சரி...
இன்றும் சரி...
ஆணுக்கு உத்தியோகம் ஒன்றுதான்
புருசலட்சணம்...!
ஆனால் உத்தியோகம் மட்டுமல்ல...
உன் லட்சணம்...!
மாற்றாந்தாயிடம் விட்டு விட்டாய்
உன் மழலையை...
கணவனுக்கும் காட்டுவதில்லை
உன் கருணையை...
பெற்றோரும் கூட
உனக்கு மற்றவர்களாகினரோ...?
இல்லறத்தை நல்லறமாக்கும்
மகிமையை மறந்தே விட்டாயா...?
நடுநிசியில் உன் உறக்கம்...!
நண்பகலில் உன
கார் சிக்னலில் நின்றது. மாலை மணி 4.30
ஆனந்தன் கார் ஜன்னல் வழியே விளக்குக் கம்பத்தைப் பார்த்தான். வினாடிகள் 77, 76, 75... என்று குறைந்து கொண்டே வர ஆனந்தனுக்கு சற்றே பதட்டமாக இருந்தது. 5.00 மணிக்குள் ஏர்போர்டில் இருக்க வேண்டும். வரவிருக்கும் வெளிநாட்டு தொழில் அதிபர்களை வரவேற்க வேண்டும். அவன் சிந்தனை ஏர்போர்ட்டிலேயே இருக்க...
அவனது கைபேசி அழைத்தது. மனைவி. எடுத்து காதில் வைத்தான்.
"ஹலோ டாடி" பேசியது பதினோரு வயது மகள் வான்மதி.
"சொல்லுடா" என்றான்.
"அப்பா காலைல உங்ககிட்ட சொன்னேனே இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டு விழாப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போகுது. அம்மா வந்துட்டாங்க...நீங்களும் வா
மனைவி சமையலறையில்.
கணவன் உள் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
உள்ளேயிருந்து தொம் என்று சத்தம் கேட்டது.
மனைவி : என்னப்பா சத்தம் அங்கே?
கணவன் : ஒன்றுமில்லை என் சட்டை பேன்ட் கீழே விழுந்து விட்டது.
மனைவி : அதற்கு ஏன் இவ்வளவு பெரிய சத்தம்.?
கணவன் : அந்த சட்டை பேன்டுக்குள் தான் நான் இருந்தேனே ...???
தண்ணீர் தண்ணீர் தண்ணீர் !
தண்ணீரின்றி கண்ணீர்.
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் !
கண்ணீர் கூட தண்ணீர்.
தோண்ட, தோண்ட சுரந்திடுமே,
குடிக்க, குடிக்க இனித்திடுமே.
பூமிக்கடியில் பிறந்திடுமே,
உயிர்கள் வாழ உதவிடுமே.
தண்ணீரின்றி வாழ்வா-அது
சாத்தியமில்லையாட.
தண்ணீரின்றி போனால்,
உலகம் சமாதியாகுமடா.
பூமிக்கடியில் எங்கும்
புதைந்துகிடக்கும் தங்கம்,
தோண்ட, தோண்ட பொங்கும்,
தண்ணீரே! வாழ்வின் அங்கம்...
> விவசாயப் பெருங்குடி மக்களே…
எங்கள் குரல்
உங்கள்
செவித்துளைக்கிறதா இல்லையா?
உம் வியர்வையில் நனைந்த
எம் கைப்பிடி வாசம்
நாசி தொடுகிறதா இல்லையா?
உம் கைகளில் இருக்கும்
ஆறிய காயங்களாவது
எம்மை ஞாபகபடுத்துகிறதா இல்லையா?
> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!
> சாகுபடி நிலம் வைத்திருக்கும்
நீங்களெல்லாம்
”விவசாயிகள்” என்று
கூறிகொள்ள வேண்டாம்…
தயவு கூர்ந்து
”விவசாய முதலாளிகள்” என்று
கூறுங்கள்..
> என்று எம்
ஏர்பூட்டிய மாடுகளையெல்லாம்
விரட்டியடித்து
உள்ளே புகுந்த
டிராக்டர்கள்(TRACTORS) சிரித்தனவோ
அன்று விழுந்தது ஒரு அடி
விவசாயிகளின் முதுகில்
உன் திருமுகத்தை ஒரு முகமாக்கி
என் அகக்கண்ணில் சிறை வைத்துள்ளேன்...!
உன் நினைவுகளை பசுமையாக்கி
என் இதயத்தில் பதியமிட்டிருக்கிறேன்...!
உன் நேசத்தை சுவாசமாக்கி
என் உயிர்க்கூட்டில் கட்டியிருக்கிறேன்...!
விழத்துடித்த கண்ணீரை
என் விழிகளுக்குள் பூட்டி வைத்திருக்கிறேன்..!
எத்தனையோ தயார் செய்தேன்
என்னை நானே...
அத்தனையும் மறந்து போய்...!
கலங்குகிறது கண்ணும் மனசும்...
பொருள் தேடி தூர தேசம் செல்லும் நீ...
கையசைத்து கடந்து சென்ற பின்...!
போதும் ஓடியது
நிறுத்துங்கள்........
ஏன் இந்த தாகம்......?
இளைப்பாறுங்கள்
இரு நொடி....
என் கரம்
பற்றி என்னோடு வாருங்கள்......!
என் அதிசய
உலகிற்கு......!
அங்கே......
வண்ணத்து பூச்சிகள்
பன்னீர் தெளிக்கும்......
மின்மினிகள்
முத்தமிடும்........!
வானவில்கள்
குடை பிடிக்கும்.......!
தேவதைகள்
தேநீர் கொடுப்பார்கள்........!
வெண்ணிற
இரவுகளில் விண்மீன்கள்
பிரகாசிக்கும்........!
எல்லா காலங்களும்
வசந்த காலங்கள்
என மலரும்........!
சோலைகளில்
தெருக்களில்
கூரைகளில்
நதிகளில்
இதயங்களில்
எங்கெங்கிலும்
அன்பு நிறைந்திருக்கும்......!
என் அதிசய
உலகின் ரகசியம்
ய