ருத்ரா நாகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ருத்ரா நாகன்
இடம்:  புதுகை ,பொன்னமராவதி
பிறந்த தேதி :  09-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2013
பார்த்தவர்கள்:  987
புள்ளி:  372

என்னைப் பற்றி...

எனது கண்கள் இரண்டு அக்னிக்குழிகள்.. நான் கந்தகக்கவிதைக்குள் குடியேறிய கவிஞன்.....
சமூகம் எனது புத்தக மேசை.....
சமூகத்தின் மீது கல்வீச எனக்கு விருப்பமில்லை....
சமூகம் என் மீது எரிந்த கற்களையே எடுத்து வீசுகிறேன்...

என் மாணவர்களை
அடித்து ஒடுக்கிய
இந்த நாட்டில் இனியும்
"வந்தே மாதரம்" என்று
சொல்வது
"தன் மூத்திரத்தை தானே
குடிப்பதற்கு சமம்"
(மெரினா என்ற ஏறுதழுவல் போர்க்களம்)
அலைபேசி:
85249 31003

என் படைப்புகள்
ருத்ரா நாகன் செய்திகள்
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2016 12:48 am

1. ************************************************
நீளும் சாதியக் கொலை
கண்ணீரோடு அலறும்
கலப்புதிருமணம்



2. ************************************************
மண்ணில் விழுந்து
மழையால் பிழைக்கிறது
விதைகள்


3. ************************************************
சாலையில் உடைபட்டு கிடக்கிறது
மூடநம்பிக்கையில்
பூசணிக்காய்



4. ************************************************
நிசப்தமான நடுநசி
விழித்துக் கொண்டிருகின்றன
நடைபாதை விளக்குகள்



5. ************************************************
அம்மா கை பட்டதும்
பிள்ளையாராகி விடுகிறது
சாணம்



6.****************

மேலும்

பல ஆண்டுகள் கழித்து வந்த போதும் காலத்திற்கும் பேசும் இந்தப் பாக்கள்....🌹🌹🌹🌹🥰👌 09-Dec-2024 12:49 am
நன்றி நன்றி 04-Apr-2016 8:12 pm
அருமை நண்பரே... அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Apr-2016 2:32 pm
நன்றி சகோ, ரசிபிற்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் .... 02-Apr-2016 10:49 am
ருத்ரா நாகன் - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2012 10:44 pm

தலைவாரிப் பூச்சூடி
பாடசாலைக்கு செல்ல முடியாப் பிள்ளை..
எழுதுகோலேந்தும் கையில்
கயவரின் நாக்கு போலொரு சாட்டை..

வரிவரியாய் எழுதுமிடமாய்
மாறிப்போன பிஞ்சு முதுகு..
இனிமைத் தமிழாய்
பேசும்வாயில் பிச்சைக்குரல்..

வறுமையின் வரிகளென
வாசிக்கும்போது கசியும் இரத்தத்துளிகள்..
சுதந்திரத்தின் கேவலத்தை
நிரூபிக்கும் உயிர் சாட்சிகள்..!

என் கடவுளேயென
ஒற்றை ரூபாய்க்காய் எம்மையழைத்து
நீளும் கைமுன் உள்ளம்குறுகுதடா..!

கடவுளின் படைப்பில்
பாவப்பலன் இதுவென்றால்
அவனைத் தூக்கில் போடும்வரை
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

பிள்ளை வயிற்றுப்பசியடங்க
வழிகாணா வல்லமைமிக்க
சுதந்திரநாட்டின் அதிகாரமையங்

மேலும்

மரத்துப்போன இதயங்களுக்கு எப்படி தெரியும் அவர்களின் வலிகள் 17-Jul-2018 9:27 pm
அருமையானப் படைப்பு. சாட்டையடிக்கும் வரிகள் புரட்சிகரமான சிந்தனை துளிகள் ... வாழ்த்துக்கள் .... 23-Aug-2016 6:49 am
உங்கள் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.... 22-Aug-2016 11:51 pm
கடந்த கால கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் .... 18-Sep-2014 6:17 am
ருத்ரா நாகன் - சிபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2013 11:12 am

அன்புள்ள
காக்கைக்கு....

மனிதனை புறக்கணித்து
மாற்றுக்கிரகம் தேடு;

இல்லையேல்,
இரண்டாம் இனமாய்
தெரிந்தே பலியாவாய்,

மூன்றாம் இனமாய்
முன்னேற்பாட்டுடன்
முறி படுவாய்...

கவனங்கள்;
கவனியுங்கள்...

கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும்
தரையிறங்காதே..,
இறங்கினால்
இனக்கலவரம்..!?

கொக்கிற்கும்
உங்களுக்கும்..!

பறந்து விடு..

உயிரைத்தின்று
உத்சவம் நடத்தும்
பெருவிழா
காண்பதெப்படி.?
கற்பித்தாலும்
கற்பிப்பான்..

பறந்து விடு..


நீதிக்கேட்டு
வீதியில் பறந்தால்
சாலைத்தேடி
சட்டம் வரும்.,
வீடு தேடி
தடியடி வரும்..
பின்,
சிட்டைப்போல்
பட்டுப்போவாய்..

பறந்

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்களின் வருகைக்கு.. மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்.. 13-Sep-2017 10:03 pm
மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பரே... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. 13-Sep-2017 10:02 pm
வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Jul-2017 4:12 pm
மிகவும் கவர்ந்து விட்டது அருமையான படைப்பு 30-Jun-2015 7:13 pm
ருத்ரா நாகன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2024 10:58 am

தென்றல் வடிவெடுத்து வந்தவொரு தேவதையோ
மின்னல்கீற் றையுன் விழியிலேந்தி நின்றாயோ
வண்ணயெழில் ஆடையில் வந்த வசந்தமோ
கண்ணில்கா தல்தீ பமோ

------இரு விகபகற்ப இன்னிசை வெண்பா

தென்றல் வடிவெடுத்து வந்தவொரு தேவதையே
மின்னல்கீற் றையுன் விழியிலேந்தி-- நின்றாய்நீ
வண்ணயெழில் ஆடையில் வந்த வசந்தம்போல்
கண்ணிலே காதல்தீ பம்

-----இரு விகற்ப நேரிசை வெண்பா

மேலும்

வெல்கம் கவிப்பிரிய ருத்ர நாகன் இது தமிழ் அலை ஒலிச் சத்தம் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் கருத்தில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 09-Dec-2024 6:29 pm
எத்தனை வருடம் கழித்து வந்தாலும் ஐயா உங்களின் கவிகளின் கரவொலி சத்தம் மட்டும் நிற்கவேயில்லை ..... சிறப்பு...!!! 09-Dec-2024 12:20 am
ருத்ரா நாகன் - ருத்ரா நாகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2016 7:45 am

ஜென்மயாசகம்....!!
நரகம் புனிதமாகு மென
யென்
மனநிலத்தை பார்வையிட
வந்த
சொர்க்கவாசிகள் புரிந்திருக்க
கூடும்......!!!

யென் உடற்குருதிக்கு
அப்பால் ஓர் நதி ஓடும்....
அந்நதிக்கரையில் நீந்தி நான்
வெளி வருகையில்
உடல் முழுதிலும் அம்புகள்
பாய்ந்து அகாலமாய்
நான் இறந்திருக்க கூடும்....


நான் கதறக் கதற
யென் கண்ணைக் கொத்தித்தின்ன வரும் உன் ஞாபகக்கழுகுகள்,
எனைச்சுமந்து கொண்டு போய்
ஓர் அமானுசிய இருளில்,
இரகசிய உணவாக்கி
இராத்திரி வேளை மட்டும்
கதறக்கதற கொல்லும்.....

எனைக்காவு வாங்கிய
உன் இதயக்காட்டெறிக்குள்
மீண்டும் மீண்டும்
இடறி விழுந்தே யென்
கண்ணீர்ப் பிஞ்சுகள்
பலியாகக் கூடும்..

மேலும்

நன்றிகள் தோழா 12-Jul-2016 8:45 am
நன்றிகள் .தோழரே 12-Jul-2016 8:44 am
ஜென்மயாசகம் 12-Jul-2016 8:43 am
மிக்க நன்றிகள் தோழரே....... 12-Jul-2016 8:42 am
ருத்ரா நாகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2019 12:49 pm

கம்பர் போய்
பார்த்தார்....
வீடு பூட்டியிருந்தது.
அப்பர் தேவர்
சுந்தரர்
மூவரும் போய்
பார்த்தனர்....
வீடு
பூட்டி யிருந்தது...
மனைவி வாசுகி
போய் பார்த்தாள்...
பூட்டு
உடைந்து கிடந்தது...
அய்யோ
என்ற படி,
வீட்டிற்க்குள்ளே
போய்
பார்த்தாள்.....
வெளுத்த நிறத்தில்
ஒரு வெள்ளையன்...
பதறியபடி
நீ
யாரென்றுகேட்டாள்....
அதற்கு அவன்
ஜி.யு.போப்
என்றான்....
என்ன வேண்டும்
என்றாள்....
ஏழு வார்த்தையில்
ஏழாவது பிறவிக்கு
அர்த்தம்
தேடிவந்தேன்
என்றான்....
பூட்டை யுடைக்க
காரணம் கேட்டாள்...
வெளியில் எங்கும்
ஏடு
திறந்திருக்கிறது...
ஆனால்
அர்த்தம்

மேலும்

ருத்ரா நாகன் - Nagaraj Ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2012 5:54 pm

தாய் தந்தை
தாத்தா பாட்டி
அண்ணன்,அன்னி
தம்பி,தங்கை
தாய்மாமன்,அத்தை
பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி
அக்கா மாமா
மச்சான் மாப்பிள்ளை
அங்காளி பங்காளி
மாமனார் மாமியார்
பொண்ணுகொடுத்தவர்
பொண்ணுஎடுத்தவர் ஒன்னுவிட்ட சொந்தம்
அன்னியின்
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
பெரியப்பா மகனுடைய
மாமாவுடைய அண்ணனுடைய
மகளுடைய
மாமியாருடைய
கொளுந்தனுடைய
மனைவியுடைய
தம்பியுடைய
அப்பத்தாவுடைய
மூத்த அக்காவுடைய
மச்சானுடைய
பாட்டிக்கு முப்பாட்டன்.
இப்படி எல்லோருடைய
ஆசிர்வாதத்தோடும்
எழுத்து இணையதளத்தில்
இணைந்து வாழும்
அனைத்து தோழர்
தோழிகளின் சார்பாகவும்
இன்று
அப்பா என்ற பதவி
அடைந்த
நண்பர் ஜெகதீஸ்வரனும்
அந்த பதவியை
பெற்றுக்கொடுத்த

மேலும்

பேச்சு வழக்கில் வந்து விட்டது அய்யா 09-Dec-2018 6:43 pm
அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க, இதுவரை இதுப்போல் உறவின்முறை வாழ்த்து கேட்டதேயில்லை,நாகா ...நமது எழுத்து.காம் தமிழில் வாழ்த்துச்செய்தி அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது..அதன் வழி செய்வோம்..பங்காளி தெரியும்...ஆமாம் அதென்ன அங்காளி..? 09-Jul-2012 6:08 pm
நா சேகர் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Apr-2018 8:25 am

என் ஞாபக
அடுக்கில்

அடுக்கிய
கோப்புகள்

கலவாடப்
பட்டுவிட்டதோ?

யோசித்துப்
பார்கின்றேன்

யாரால் இது?

போகட்டும்

கவலையில்லை

வாங்கிய
கடன்

கொடுத்த
கடன்

ஏமாற்றிய
காதல்

துன்பந்தரும்
பசி

பட்டியல்
துடைக்கப்பட்டதோ

யார் வேலை
இது?

போகட்டும்
கவலையில்லை

கண் மூடினால்

இப்படியொரு
சுகமெனில்

கடவுள் ஏன்
விழிப்பை

கொடுத்தான்?

கேள்வி
வருகின்றதே

எப்படி இது?

கண்திறக்க
நினைக்க

காணாமல்
போனது

கேள்வி

போகட்டும்
கவலையில்லை

எங்கிருக்கின்றேன்
நான்?

மனநல
மருத்துவமனை

மறதிநோயாம்
எனக்கு

நன்றி
கடவுளே

இல்லை
இல்லை

நன்றி
மர

மேலும்

கொடுத்த கடன் மறக்கலாம்.... வாங்கிய கடனும் மறந்துவிட்டீரோ.... வித்தியாசமான சிந்தனை...... 26-Apr-2018 11:30 am
மாறுபட்ட சிந்தனை ... அருமை 26-Apr-2018 11:16 am
அருமை .வித்தியாசம் இனிமை 26-Apr-2018 11:09 am
ஊழல்கள் செய்தவர்கள் பலர் தன்னை காப்பாற்றிக் கொள்ள இது போல் எத்தனை வழிமுறைகளை ஆள்கிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2018 9:57 am
ருத்ரா நாகன் - ருத்ரா நாகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2018 2:50 pm

திரு.அகன்( புதுவை):
தளத்தில் என்னை ஊக்குவித்த
முதல் ஆசான்.
கவிச்சக்கரவர்த்தி.....

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா(நாகர்கோவில்):
இலக்கியத்தையும் புதுக்கவிதையையும் இணைத்து
யாவருக்கும் புரியும் படி
எழுதும் தளத்தின் என் முதல்
நண்பன்.....
கருத்து வேறுபாடு வந்தது..
காணவில்லை


கே.எஸ்.கலை(இலங்கை):
மிகச்சிறந்த கவிஞர்
இலங்கையிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு
என்னுடன் பேசிய சிறந்த
நண்பர்....தளத்தில்
ஏதோ சண்டை போட்டோம்.....
எதற்காக சண்டை போட்டோம்
என்று மறந்தே போனது...நட்பு வட்டத்தில் இருந்து எனை நீக்கியும் விட்டார்......

புலமி அம்பிகா:
தமிழ் எழுத்துக்களை தட்டியெழுப்பி
விளையாடும் எழுத

மேலும்

வந்தால் மிக மகிழ்ச்சி தோழர்.......... எல்லோரையும் மறுபடியும் பார்க்கத்தான் தோன்றுகிறது..... 2012 முதல் 2015 வரை தளத்தில் வரும் ஒவ்வொரு படைப்பும் மீண்டும் மீண்டும் படிக்கத்தோன்றும்......அத்துணை திறன் மிகு படைப்பாளிகள்.....அவரவர்க்கென்று ஒரு தனித்துவம்...... நன்றிகள் தோழர்....-!!!! 24-Apr-2018 5:00 pm
கால மாற்றத்தில் வருவார்கள். நம்புகிறேன். முடிந்தால் சந்திப்போம். 24-Apr-2018 3:59 pm
மகிழ்ச்சி தோழரே.... விட்டு போனவர்களில் கவி ஜி யும் சிறந்த படைப்பாளி ........பழைய படைப்பாளிகளை மறுபடியும் ஒன்றிணைப்பது முடியாத காரியம்...... சூழ்நிலைகள் பலவாறு பிரிந்து கிடக்கிறது....தோழரே... நன்றிகள் தோழரே.....சிறந்த படைப்புகளை கொடுங்கள்....... 24-Apr-2018 2:19 pm
நண்பரே நான் தளத்திற்கு புதியவன். இருப்பினும் பழைய கவிதைகளை வாசித்து வருகிறேன். கவிஜி இடம் பேசினேன். திரு.அகன் இடம் வாட்சப் தொடர்பும் கொண்டேன். உங்களைபோன்ற பழையவர்கள் சற்று முயற்சித்தால் தளம் பொலிவு பெறும். வாருங்கள்... 23-Apr-2018 10:38 pm
ருத்ரா நாகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2018 8:07 am

கவி யென்பது
உணர்வைத் தூண்டவேண்டும்

உணர்ச்சிப்பெருக்கெடுத்து
அழகாய் தோன்ற வேண்டும்....

சமூகத்தை தன் வார்த்தை சவுக்கு கொண்டு
சுழற்ற வேண்டும்.....

காதலின் புரிதலை
காதலின் பக்குவத்தை
காதலின் ஆழத்தை
காதலின் வயதினை
அழகாய்ச் சொல்ல
வேண்டும்......

நியாத்தை எழுதி
நீதி சொல்லித் தர வேண்டும்....

கன்னத்தில் அறைவதை
வார்த்தைகளால் அழுத்த
வேண்டும்......

தன் கவிதை வாசிக்கும்
வாசகன் கவிஞனை அவனது ச
தோலில் சுமக்க வேண்டும்....

கவிதை காட்சியாய்
தோன்ற வேண்டும்.....

மேலும்

நன்றிகள் கவின் சாரல்...... 22-Apr-2018 9:14 pm
நல்லது நண்பரே நன்றிகள் 22-Apr-2018 9:10 pm
நெஞ்சில் உள்ள நினைவுகள் யாவும் அனுபவங்கள் தான். அந்த அனுபவங்களின் தன்மையை பொறுத்து வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் ஏதோ ஒரு நிதர்சனத்தைச் சார்ந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2018 3:17 am
கவியென்பது யாதெனக் கண்டுகொண்டேன் . 21-Apr-2018 10:40 pm
ருத்ரா நாகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 1:26 pm

குடி+அரசு=குடிகார அரசு.
குடிகாரர்களைக் கொண்ட
அரசுக்கு குடியரசு தேவையில்லை.....
ஒரு ,குவாட்டர் அரசு போதும்....
வாழ்க குடி...வளர்க அரசு...

குடியால் கெட்ட மக்களுக்கும்
குடியை ஊத்திக்கொடுக்கும்
தமிழக அரசியலுக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்.....

மேலும்

எழுதுவோம்....தோழா.....எழுதுவோம்... 26-Jan-2018 8:44 pm
கூடிய சீக்கிரம் பறித்துவிடுவார்கள் தோழர்...‌‌...வேதனை 26-Jan-2018 8:43 pm
இந்த மாதிரி கவிதை எழுதுறதுக்கு சுதந்திரம் இருக்கே அத நெனச்சு சந்தோஷ படுங்க !! இதயு பரிச்சிடுவாங்கலுன்னு பயமா இருக்கு ..................... நீங்க சொன்னது உண்மைதான் . 26-Jan-2018 8:00 pm
அவலங்கள் நிறைந்த தேசம் உள்நாட்டின் ஆதிக்கத்தால் அடிமையாகி கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 7:47 pm

குடி+அரசு=குடிகார அரசு.
குடிகாரர்களைக் கொண்ட அரசுக்கு குடியரசு தேவையில்லை.....
ஒரு ,குவாட்டர் அரசு போதும்....
வாழ்க குடி...வளர்க அரசு...

மதுக்கடைக்கு குடியரசு தினம் 
ஒரு கேடு......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (150)

வாசு

வாசு

தமிழ்நாடு
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (150)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (150)

sarabass

sarabass

trichy
manikandan sugan

manikandan sugan

SN சாவடி கடலூர்
மேலே