காவ்யா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காவ்யா |
இடம் | : thirunelveli |
பிறந்த தேதி | : 12-Apr-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 192 |
புள்ளி | : 35 |
வாழ்க்கை யை வண்ணம் தீட்ட வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கும் ஓவியன் தான் நான்...மகிழ்ச்சியுடன்...
உன்னை பார்த்ததும் தான் தெரிந்து கொண்டேன்
விழிகள் கூட கவி எழுதும் என்று..
எப்பொழுமே சிரித்து கொண்டிரு..
நீ சிரிக்கும் போது சிரிப்பது உன் உதடுகள் மட்டுமல்ல...
உன் கண்களும் தான்...
நீ பேசும் வார்த்தைகளை விட
நான் அதிகம் நேசிப்பது உன் மௌனத்தையே..
மௌனத்திலும் உன் விழிகள் பேசும்
ஆயிரம் வார்த்தைகளை நீ உணர்த்தாமல் நன் உணர்வேன்..
நான் மனதிற்குள் நினைக்க முற்படும் முன்னரே
உன் வார்த்தையில் வெளிப்படும் எனது எண்ணம்...
இப்படியோர் உறவை,
என்றும் என் நினைவுகளாக மட்டும் வைத்து கொள்வதா?
நிஜமாகவும் அருகில் இருக்க ஆசை..
கலையிழந்த முகம் கண்களில் மட்டும் காதலை காட்டுகிறது...
சுரத்தில்லா வார்த்தைகள் உன் பேச்சு பேசுகையில் வீரியமடைகிறது...
வலி பொறுக்கும் இதயம் உன் நினைவுகளால் தன் துடிப்பை சீர் செய்கிறது...
நடக்க தடுமாறும் கால்கள் உன்னை பார்க்க ஓடோடி வருகிறது...
என்கூட மரணம் நம்மை பிரிக்கும்வரை இருந்துவிடு...
இன்று தேசத்தின் பிறந்தநாள் . யாருடைய பசியையோ தின்று கொழுத்திருக்கிறது இந்த ஊழல் தேசம்....! அறத்தின் வாசலில் நின்றுகொண்டு நீதியின் கதவை தட்டும் மனசாட்சி. நாம் புதிய தலைமுறைகள் குற்றங்களை பெருமூச்சுவிட்டபடி கடக்கப்படுகிறது வாழ்வு....! வழக்கம்போல் இன்றும் உறுதிமொழி நாம் இந்தியர்கள் முதலில் மனிதர்கள்
உன்னை பார்க்கும் அந்த ஓர்நொடி
முதல்புன்னகையால்நிரப்புகிறேன்
என்முகத்தை...
முகவரியற்ற காற்றை போல
வந்து வந்து செல்கிறாய்...
பிடித்து வைக்க முடிய வில்லை...
ஆனாலும்பிடித்து போய்
விட்டது உன்னை...
நீ செல்லும் பாதை இல்
தினமும் நான்....
ஒரு
முறையாவது
உன்னை காண....
உன் பார்வை ஒன்னு
போதும் நான் உயிர் வாழ...இது முன்பு...
நீ மட்டுமே வாழ்க்கை ஆகிறாய் இன்று...
உன் நினைவினால் நான்
நினைவிழந்து விட்டேன்...
திரும்பி விடு சீக்கிரம்...
உனக்காக
நான் காத்திருக்கிறேன்...
சொல்லி விடு ஒரு வார்த்தையில்...
இறுதி வரை நான் உன்னுடன்...
எதை ரசித்துவிட்டப்பின்னால்
அது நம்மை
எளிதில் கடந்துபோகச் செயகிறதோ அது ஈர்ப்பு
எது அதற்குள்
நம்மை கட்டிவிடுகிறதோ
எது நம்மை ஆளுமை செயகிறதோ
அதுவே வசீகரம்
மீளக்கூடியது ஈர்ப்பு
மீள முடியாதது வசீகரம்
ஒரு குட்டிப்பூனையின் பச்சைநிற கண் மணிகளை
பார்த்து
இலயித்துப்போனதுண்டா
ஒரு போமெரியன் நாய்க்குட்டியின்
பழுப்பு நிற கண்மணிகளை
கடந்துபோக முடிந்ததுண்டா
மழலையின் முழிகளை கடந்துவிட்டப்பின்னால்
திரும்பி திரும்பி
அதை எத்தனை முறை பார்த்திருப்பீர்கள்
தம்பி ராம் அவர் பதிவில்
ரசிக்கும்படி சொன்ன எல்லாமே
நாம் கடந்து போகக்கூடியவைகள் தான்
என்றால் அவை ஈர்ப்பா
இல்லை வசீகரமா
இதோ
மரங்களின் விதைகளைஒரு நாள் கருவாக வயிற்றில் சுமந்தக் குருவிகள் எச்சமாக பிரசவித்தன!தென்றல் அவற்றை வாரி அணைத்துக்கொண்டது மென்மையான தாய்மையாக மாறிமண் வயிற்றில்!மழைத்துளிகள் உதிரமாகிசூரியத் தந்தையின் கண் பார்வையில் பிறந்தவுடன்!தன் இலைகள் கைகளாக மாறி தன்னை பெற்றெடுத்த அனைத்து அன்னைக்கும் நன்றி சொன்னது!ர ஸ்ரீராம் ரவிக்குமார்.
ஆண் அல்லது பெண் உடல் என்னும்
பிணத்திற்கு மதிப்பு இல்லை
ஆண் அல்லது பெண் உயிர்
என்னும் பேய்க்கும் மதிப்பு இல்லை
பிணமும் பேயும் இணைந்த
மனிதனுக்கும் மதிப்பு இல்லை
அதற்குள் இருக்கும்
ஆண்மைகும் மற்றும் பெண்மைக்கும் தான் மதிப்பு
எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு வருவதல்ல
காதல்
எல்லா உயிர்களிடத்திலும் ஈர்ப்பு வருவதுதான்
காதல்
கிடைக்குமா அந்த வரம்...????
***********************************************
மேகத்தை போல சிறந்தவள்...அன்பை பொழிவதில்...
மின்னலை பார்த்ததும் கண்கள் தான் போய்விடும்....
எனக்கு இதயமே போய்விட்டது...என்னவளின்
கண்பார்வையை கண்டவுடன்...
மின்னலே பார்வையாக வீசும் அவளின்
கண்களின் அசைவிலே தான் என் உலகமே உள்ளது....
உன்னை கண்டது என்கண்கள் எனவே காயங்களும் என்னுடனே...
காலில் கண்ணாடி குத்தினாலும் வலி இல்லை...
என்னவள் இருக்கும் இடத்தை அடையும் வரை...
வலிக்கின்றது...என்னிதயம்..,
அளவுக்கதிகமாக அவளின் நினைவுகளை ஏற்றி விட்டதால்...
இறக்க முடியவில்லை...நினைவுகளை....அதனால்
சுற்றி திரிகிறேன் உ
ஜல்லிக்கட்டு தவறென்று
மல்லுக்கட்டும் மூடர்களே !
வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடியவன் வழி வந்தவர்
நாங்கள் ; வளர்த்த
பிள்ளைகளுக்கா
தீங்கு செய்வோம் !
அறவழியில் போராடுவதால்
அறிவிலிகள் என
நினக்க வேண்டாம் எம்மை !
பீரங்கியின் குண்டும்
துளைக்காத கோட்டை
எழுப்பியவன் வழித் தோன்றல் நாங்கள் !
புல்லுக்கட்டு தூக்க
வலுவில்லாதவனெல்லாம்
இன்று ஜல்லிக்கட்டை
எதிர்க்க வந்து விட்டான் !
புலியை அடக்கியவனின்
வீரப்பரம்பரையின்
கடைசி சொட்டு ரத்தம்
காயும் வரை ஈடேராது
உங்கள் எண்ணம் !
உயிர்வதை கண்டு
பொங்கி எழுவோரே !
தினமும் உணவுக்காக
ஆடும் , மாடும் ,கோழியும்
வெட்டுமிடம் ச
நான் இறந்த பிறகு என்
இதயத்தை நீயே பத்திரமாக
வைத்துக்கொள் !!!!
ஏன் ?? என்றால்???
என் இதயம்
எனக்காக வாழ்ந்ததை
விட உனக்காக வாழ்ந்தவையே
அதிகம் !!!!
என்றும் உன்
நட்புடன்
ரேனு,.....
அண்ணார்ந்து வானத்தை பார்க்கிறேன்...நீயே தெரிந்தாய்...
கண் மூடி பூமியை பார்த்தேன்...அதிலும் நீயே தெரிந்தாய்....
எப்படி வாழ போகிறேன் என்று தெரிய வில்லை...
உன் ஞாபகங்களை மறைத்து கொண்டு....