மணிசந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணிசந்திரன்
இடம்:  கூடலூர் நீலகிரி
பிறந்த தேதி :  07-Feb-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  220
புள்ளி:  40

என்னைப் பற்றி...

ஜாதி, மதம், இனம், மொழி பேதங்களை தகர்த்தெறிந்து மனிதனாய் மனித நேயத்துடன் பிறர்க்கு உதவி செய்து வாழ்வோம். அன்பாலும் பசுமையாலும் உருவான உலகினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுதிரள்வோம்

என் படைப்புகள்
மணிசந்திரன் செய்திகள்
மணிசந்திரன் - மணிசந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 11:41 am

கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நனைகிறது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மறுக்கிறது…
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது...

மேலும்

அழகு 20-Aug-2014 10:10 pm
ஆனால் எழுதிய வரிகளோ ஏக்கத்தை தருகிறது .. இன்னும் வரிகள் வளரவில்லையே என்று மனிச்சந்திரன் . அருமை 11-Jul-2014 3:47 pm
அருமை..அருமை.. 11-Jul-2014 1:55 pm
நன்று ! 11-Jul-2014 1:45 pm
மணிசந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 2:26 pm

இருக்கும் போது
உணவின்றி இறந்தான்
இறந்தப்பின் பலவகை
உணவுடன் படையல்....

மேலும்

உண்மை தோழா , உலக நடைமுறை இதுதான் . 16-Feb-2015 11:33 pm
உலகம் திருந்தாது 16-Feb-2015 3:11 pm
ம்ம்ம் இதுதான் உலகம் .... 16-Feb-2015 2:59 pm
ம்.....அது தான் உலக வழக்கம் 16-Feb-2015 2:52 pm
மணிசந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 2:21 pm

நான்....
மரமாக பிறந்தேன்
வெட்டி விழ்த்தினீர்...
ஊரும் பாம்பாக பிறந்தேன்
அடித்தொழித்தீர்...
பறக்கும் பறவையாக பிறந்தேன்
சுட்டொழித்தீர்...
பாயும் புலியாக பிறந்தேன்
என் வீட்டையழித்தீர்...
ஆறறிவு மானுடனாக பிறந்தேன்
ஆறா வடுவாய் பலவளீத்தீர்...

ஆவேசமாய்
இவையனைத்தும் நிகழும்
மண்ணாய் பிறந்தேன் - அங்கே
துளையிட்டீர் ஏற்றுக்கொண்டேன்,
பிணம் புதைத்தீர் ஏற்றுக்கொண்டேன்,
மாசு செய்தீர் ஏற்றுக்கொண்டேன்,
விதைத்தீர் மகிழ்ச்சிகொண்டேன்,
இன்னும் பலசெய்தீர் ஏற்றுக்கொண்டேன்,
ஆனால்
உயிரருத்து, கற்பழித்து என்னில்
செய்வதை ஏற்க்கமுடிவதில்லை
உயிரில்லா என்மேல் - அவர்கள்
உயிர்குருதி பாய்வதை - உய

மேலும்

சிறப்பு தோழமையே , எழுத்து பிழைகள் கவனிக்கவும் 16-Feb-2015 11:34 pm
மணிசந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 2:03 pm

செயலற்று வீழ்ந்துள்ள
வீரர்களே - வாரீரா
யாம் வேட்டையாடவுள்ளோம்
அஃது,
கானகமில்லை, வானகமில்லை
காட்டையாலும் வனவிலங்கையுமில்லை
யாதெனில்,
பட்டுப்பூச்சி மென்னுடல்
சிறுதளிர் நங்கையை சூறையாடும்
மனித வெறிநாய் கூட்டங்களை...
நீர்,
கண்டீராயின் -அந்
நாய்களை - இந்
நாட்டில் கானது
செய்வீராக,
பால் மணம மாற
பசுந்தளிரை மேயும் - அவ்
அக்றிணை கூட்டங்களை
அவ்வுலகு அனுப்புவீராக...
அக்றிணை உயிரும்
அறம்பேணும் அறம்பேண
அத்திணையை இத்திணை
விட்டு நீக்குவீராக...
செய்வதறியா செயலற்று
சிலையான வீரர்களே
அழித்திடுவீர் அந்நாய்களை
இன்றேல்
அழித்திடும் நும்முடைமையை....

மேலும்

வரிகளை என வாசிக்கவும் 16-Feb-2015 11:38 pm
நல்ல கோபம் , வாரிகளை தீட்டுங்கள் தோழி , வானம் வசப்படும் . 16-Feb-2015 11:37 pm
மணிசந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 1:13 pm

கண்ணாடி முன் நங்கை நின்றால்
தன்னையே தான் கண்டாள்.
செவ்விதழ் உதடுகள்
தேன் வடித்தன,
காந்தவிழி கண்களோ
காதல் பகன்றன,
கூறிய அவள் பார்வை
கூந்தலை ரசித்தன,
மூச்சிவிடும் மூக்கோ
மூச்சடைத்து அவளை ரசித்தன,
கோபுரகலச மார்பகங்களோ
கோதையின் அழகை மெருகூட்டின,
மெல்லிய இடையோ
மேனியின் அழகை பறைசாற்றின,
அன்னையின் அழைப்பால் - தன்
அங்கழகு ரசிப்பு முற்றுபெறாது,
திண்ணிய அவள் மனம் வேண்டாமென
தடுத்தும் முகமூடும் ஆடையால்
முக அழகை மறைத்து
முக்காடிட்டு சென்றால்
முற்று பெறா ஆசையுடன்....

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பில் (public) latif மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2014 12:14 am

விரல்கள் தழுவ
இதழ்கள் உலவ
இன்னிசை பாடும் புல்லாங்குழல்....

மூங்கிலின்
கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த தாகம்...

முணுமுணுத்தவாறே
பிறப்பெடுக்கிறது
புல்லாங்குழலில் காதல் ராகம்...

காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?

எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......

இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...

இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...

அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....

நான் காதல்
வழி கேட்டு வந்தால்
நீ வலி கூட்டி செல்வாய்...

மேலும்

இடையில் மானே தேனே கிடையாதா ,,,,,,,,,,,அருமை 03-Mar-2015 1:48 am
ஆமாம் தோழரே..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி...! 09-Jan-2015 7:55 pm
இதய அறை கர்ப்பம் தரித்து என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின... அடடா!!! அவ்வளவு காதலா? 09-Jan-2015 6:18 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ப்ரியா...! 06-Jan-2015 8:36 am
நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2014 10:47 am

ஒரு நாள்
வருமானம்
தொல்லை இல்லை
துக்கம்
இல்லை.........!

நீண்ட நாள்
போராட்டத்தை
சுமந்து வாழும்
சுமைகள் மேலும்........!

இரவு பகலாய்
பாடுபடும்
உறக்கத்தை
மறந்து வாழும்........!

ஊனத்தை
முதலாக
கொண்டு வாழ்கிறோம்
போராடுகிறோம்.........!

உலகம்
எங்களை
ஏழ்மையாக பார்க்கிறது
துரத்துகிறது.......!

எங்கு
சென்றாலும்
மனிதர்கள் தப்பித்து
செல்ல
வழியில்லை..........!

அமைதி
எங்கே
நிலையான வாழ்க்கை
எங்கே தேடிகிறோம்
வீதியிலே........!

உடுத்த உடை
இருந்தும்
உடல் தெரிகிறதே
மனம் வலிக்கிறதே..........!

தினமும்
சந்திக்கும்
யுத்தம் எங்களின்
வாழ்

மேலும்

அழகான படைப்பு . 20-Aug-2014 10:06 pm
உண்மைதான்....உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே......... 19-Aug-2014 12:01 pm
உதவிக்கரத்தை தேடுகிறோம் தவிக்கிறோம்...........! தொடர் வழிப்பாதை எங்களுக்கு தெரிகிறது நடக்கிறோம் எங்கு செல்கிறோம் என தெரியாமல்..........! வலி நிறைந்த வாழ்க்கை, வரிகள் நன்று 19-Aug-2014 11:45 am
உமது வருகை மிக்க மகிழ்வு தோழமையே 19-Aug-2014 11:38 am
மணிசந்திரன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2014 7:38 pm

பாட புத்தகம் தூக்க வேண்டிய
பட்டுபோன்ற தோள்கள்
பாரங்கட்களை தூக்கி
பரிதவிக்கிறது....

பட்டாம்பூச்சியாய் பறக்கும் வயதில்
பாவமறிய சிறார்கள்
பட்டுநூலுக்காக பலியிடப்படுகிறது

தீபமாய் சுடர்விடும் ஒளிகளை
தீ பந்தமாய் மாற்றி
தீப்பெட்டி சாலையின்
தீ குச்சிகளாய் அடுக்குகின்றனர்..

வசந்தக்காலமான வாழ்கையில்
வாழ்விடமின்றி உணவின்றி
வானவேடிக்கைக்காக - அவர்கள்
வானவில்லாய் மறைகின்றனர்...

குடும்ப சூழலால் - முதலாளியின்
குறைவான ஊதியத்துகும்
குப்பை கூட்டியேனும் கும்பிடுபோட்டு
குடித்தனம் நடத்துகின்றனர்...

ஓராயிரம் கோடி மக்கள் தலைவன்
ஒருநொடியேனும் இவர்களை சிந்தித்தால்
ஓராய

மேலும்

அருமையான சிந்தனை 20-Aug-2014 10:07 pm
ஓராயிரம் கோடி மக்கள் தலைவன் ஒருநோடியேனும் இவர்களை சிந்தித்தால் ஓராயிரம் தீபங்களை ஒருசேர ஏற்றலாம் // உண்மை நண்பா யார் சொல்ல அவர்களுக்கு இவர்களின் நிலையை // 13-Aug-2014 8:41 pm
நன்றி 13-Aug-2014 7:59 pm
நன்றி 13-Aug-2014 7:59 pm
மணிசந்திரன் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2014 12:29 am

பானையில் இல்லா
சோற்றை அள்ளி அள்ளி
போடுகிறது அகப்பை
முகத்துதியாய், முறுவலாய் !

சொற்பமும் ஈரமில்லா
பாறைகளில் மட்டுமே
வேரூன்றி வளர்கின்றன
சுயநலச் செடிகள் !
வறட்சியின்
விலாசமும் விசாலமும்
உள்ளூர பரவிக் கிடக்கும் !

சுளைகளைப் போர்த்தி
மறைந்துக் கிடக்கும்
புலப்படாத விடமேற்றிய
முட்களின் முகவரி
இன்சொல் உதடுகளில்
தோழமைக் கீதம் பாடும் !

ஈரலிப்பு நிலத்தில்
மலட்டு விதைகளுடன்
கிளை பரப்பி நிற்கும்
வார்த்தை விருட்சங்கள்
வாழ்த்து துதிகளாய் !

====

கலப்படம் செய்யப்பட்ட
உணர்ச்சிகளின் உணர்வுகளின்
விசமத்தில் விஷமேறிய
நரம்புகள் வெடித்து
விடுதலைக்கு இழுத்துச் ச

மேலும்

நன்று 08-Jul-2014 12:18 pm
வார்த்தையில் அருமையாக விளையாடி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2014 9:48 pm
அருமையான வார்த்தைகள் தோரணை 11-Apr-2014 11:14 am
சிறப்பான வார்த்தை கையாடல்.. 11-Apr-2014 2:07 am
kirupa ganesh அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Apr-2014 11:16 pm

மகனே ,

உயில் எழுத
பணமில்லை ....

உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்

சடலத்தை
சங்கு ஊதி

மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க

சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க

செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை

சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்

மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது

உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !

சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !

தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .

வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு

இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி

மேலும்

அழகாய் உள்ளது நண்பரே 27-Apr-2015 2:43 pm
மிக்க நன்றி பசப்பி 24-May-2014 8:51 pm
அருமையான கவிதை தோழமையே. 24-May-2014 6:13 pm
மிக்க நன்றி கார்த்திக் 18-May-2014 6:38 pm
மணிசந்திரன் - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 1:27 pm

காலை கதிரவனை நான் கண்டேன்!
வறுமை கோடுகள் அடி வானத்தில்
கண்கள் சிவசிவக்க மெதுவாய்
விழித்தெழ நான் கண்டேன்...!

தங்கை பாசத்தாலே...
தன் பங்கையும் தந்துவிட்டு
கலங்கி நிற்கும் சோதரன் போல்
காலை கதிரவன் வர நான் கண்டேன்...!

விழி விரித்தால் புவி எரியும்
புவியே தமக்கையாய் ஆனதெண்ணி
மெதுவாய் மலரும் ...
கடல் தாயின் நாயகனே !

எல்லா வளமும் புவிக்கு தந்து
ஏக்கமுடனே பார்த்திட நான்கண்டேன்!
மறுவீடு புகும் பெண்போலே
புவியவள் நகர்ந்து சென்றிட நான் கண்டேன்!

துணையாய் வெள்ளி நிலவை கொண்டும்
கண்கலங்கி....
பெருந்தன்மையாய் கதிரவன்
நின்றிட நான் கண்டேன்...!

நின் கவலை தீர்த்து

மேலும்

இல்லை அண்ணா நிண்ட நாளாக நான் தளத்திற்க்கு வர வில்லை 31-Mar-2014 10:17 am
நீண்ட இடைவேளைக்கு பின் உன் கருத்து கண்டேன் .கண்கலங்கி ஆனந்த நீர் வடிந்தோட கண்டேன் தோழா ! 31-Mar-2014 9:03 am
சிவக்கும் உன்கண்ணை சிரிக்கச் செய்து பார்க்கும் கண்ணை குளிரச் செய்து மடிதாங்கி நிற்கும் மலர்களெல்லாம் பூக்கச் செய்து வலி தீர்க்கச் செய்வாய்! அழகு :) 30-Mar-2014 2:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (112)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (112)

இவரை பின்தொடர்பவர்கள் (112)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே