முல்லை - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முல்லை |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 17-Mar-1949 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 314 |
புள்ளி | : 43 |
நட்பை மதிப்பவன். கருத்துகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்பவன். கதை, கவிதை படைப்பதில் ஆர்வம் உள்ளவன்.
“கொலைப்பாதகர் கூட்டமது
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”
தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...
கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...
விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித
என் பிள்ளை!
என் பிழைகளை
கண் முன் காட்டும்
கண்ணாடி!
முன்னை மொழிக்கெல்லாம்
மூத்தவளே;
என்நெஞ்சில்
என்றென்றும் நிற்கும்
இனியவளே ! –
மண்ணுலகில்
மூவேந்தர் வாழ்த்த
முகிழ்த்தவளே; உன்னையென்
நாவேந்த வாராய்
நயந்து !
வானத்தின் மேலே மேலே
பறந்தேன்
ஒரே இருள் !
பாதாளத்தின் கீழே கிழே
விழுந்தேன்
ஒரே இருள் !
பூமியில் மட்டும்தான்
வெளிச்சம் !
வாழ்க்கைக்கு !
என்று உதிர்வோம் என்று கூட தெரியாத அந்த பசுமையான இழைகள் எப்பொழுதும் காற்றோடு கலந்து உறவாடுகின்றன....
அவை என்று உதிர்வோமென்றும் நினைப்பதில்லை,
அவை நிகழ் கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன..!!!
நாம் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு....!!!
காலம் காலமாய் நம் மண்ணில்
விளைந்த பொன்னை பகிர்ந்தோம்
மகிழ்வித்தோம்!!
இன்று தனி மனிதனுக்கும் இல்லை என்ற நிலை நாளை நிலை என்னவோ ???
எத்தனையோ வியர்வை துளிகளை
நீராய் ஏற்று கொண்டது இந்த மண் ,,
இன்றோ!!!!
வியர்வை துளிக்கே பஞ்சம் ?????
எங்கிருந்து பொழியும் மழை!!!!!
சிந்திப்போம்..... செயல்படுவோம்.......
விதை விதைக்காமல்
மரம் வளரும்
என்ற கனவில்
வாழும் மனிதர்களே !
வினை இல்லாமல்
வெற்றி வரும்
என்ற நம்பிக்கையில்
திளைக்கும் மனிதர்களே !
முயற்சி செய்பவர்களுக்குத்தான்
முக்தி என்ற இறைவாக்கை
ஏன் மறந்தீர்கள் ?
வானத்தின் மேலே மேலே
பறந்தேன்
ஒரே இருள் !
பாதாளத்தின் கீழே கிழே
விழுந்தேன்
ஒரே இருள் !
பூமியில் மட்டும்தான்
வெளிச்சம் !
வாழ்க்கைக்கு !
வலுவான தலைமைக்கும் வருங்கால நலனுக்கும்
நிலைசேர்க்க உங்களது வாக்கா ?
பழுதான கொள்கைக்கும் பண்பற்ற செயலுக்கும்
விழுவதுதான் உங்களது போக்கா?
பாருக்கும் பீருக்கும் பணம்நீட்டு வோருக்கும்
தருவதுதான் உங்களது வாக்கா ?
பேருக்கும் புகழுக்கும் பின்னர்வரும் விருதுக்கும்
தருமத்தை மறப்பது;உம் போக்கா?
உழைக்காமல் பதவியிலே உட்கார நினைப்போர்க்கு
விலையாகும் உங்களது வாக்கா ?
அழைக்காமல் சேவைதன்னை அளிப்போரை மதிக்காமல்
பிழைப்பதுதான் உங்களது போக்கா ?
உடலிலுள்ள
ஒவ்வொரு செல்லும்
அவளிடம் காதலை
சொல்ல செல்
என்கிறது.
உன்னை
காதலிக்கிறேன்
உன்னையே
காதலிக்கிறேன்
உனக்குள்ளே
என்னை காதலிக்கிறேன்.
எதை சொல்ல
நான் செல்ல..?
இதை சொல்லி
அவள் மறுக்க
வதைத்துவிடுமோ
என் இதயம்...?
சொல்லாத காதல்
செல்லாது போகும்.
சொல்லும் காதல்
வெளுத்திடுமோ மானம்...?
சொல்லாத காதல்
எவ்வாறு வெல்லும்..?
இருதய சத்தத்தில்
வெடிக்கும் காதலை
இரத்த மையெடுத்து
நரம்பு முனையில்
கொட்டி விடவா ?
அடியே..!
உச்ச மலையில்
மிச்ச உயிரோடு
காத்திருக்கிறேன்.
காதலுடன்....
வருவாயா ?
உனக்காக ...
உனக்காக ..
உச்ச மலையிலிருந்து
இன்னும் சற்று ந
நெல்லுச்சோறு
வடிச்சிகிட்டு
நெலவத் தேடிப்போகயிலே
நீ இருக்க...!
நெலவிருக்கு....!!
நீட்டி மடக்கி இருந்து எழும்ப
மணலக் காணோம்
ஆத்துக்குள்ள....!!!
***************************************************
கொளம்பு உரிச்சித்
தலையக்கோதி .. நீ
நடைபழக்கி அதட்டயில...
ரெட்டைத்தாயிச் செருக்கோட
துள்ளியோடுது.......
புதுசாப் பொறந்த
ஆட்டுக்குட்டி....!!!
*****************************************************
அந்த வருச அறுவடைக்கி
அறுத்துப்போட மொத ஆளா
மாம்பழச் சேலையுடுத்தி
மங்களமா நீ எறங்க...!!
மகராசி நல்லாயிருன்னு
உதுந்து வாழ்த்துது
பழுத்த நெல்லு...!!!