yathvika komu - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : yathvika komu |
இடம் | : nilakottai |
பிறந்த தேதி | : 25-May-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 2277 |
புள்ளி | : 420 |
கவி பயில வந்தவள் .கவிதையோடு மட்டுமே வாழ்பவள் .கவி வரம் பெற கணினியால் தவம் கிடப்பவள் .உங்கள் மனம் கவர்ந்த தோழி நான். உங்கள் கவி தேடி ,என்னை தொலைக்க வந்த விட்டில் பூச்சி நான்,
அம்மா !
ஆயிரம் ஆயிரம்
விட்டில் பூச்சியாலும்
அணைக்க முடியாத
அன்பின் மெழுகுவர்த்தி நீ !
காலை காப்பியில்
தொடங்கி
இரவு போர்வை போர்த்துவது வரை
எத்தனை எத்தனை
பணிவிடைகள்
செய்வாய் நீ !
நான் காலையில்
கிளம்பும் போது
உன் பரபரப்பு
பம்பரத்தை போட்டிக்கு அழைக்கும் !
வேண்ணும்மா...............
சொன்னால் போதும் ,
எனக்காய்
பாற்கடலை கூட
பரந்தாமனிடம் கடனாய் கேட்பாய்!
பசிகிதுமா ......,
சொல்லி முடிப்பதற்குள்
பல வகைகளை
பத்து நிமிஷத்தில்
பரிமறுவாய்!
காய்சல் வந்து
நான் படுத்தால்..............!
கஞ்சி கூட உப்பு கரிக்கும்
உன் கண்ணீர் பட்டு !
அம்மா ...,
நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!
கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.
பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட
எழுத்து இண்ணையதளத்தில் எனது சக படைப்பாளியும் இனிய தோழியுமான யாத்வீகா கார்த்திக் தினமலர்- மதுரை பதிப்பகத்திற்கு கொடுத்த இயல்பான பேட்டி.
படித்து பாருங்கள் இல்லத்தரசிகளே.!! . உங்களாலும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இந்த கவிதாயினி !
-------------------இரா.சந்தோஷ் குமார்
தோழமை நெஞ்சத்தீர் வணக்கம்
தளத்தின் கவிதைக்கென்று யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் எனும் ஒரு தொகுப்பு முதலில் வெளிவந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.
இரண்டாவது தொகுப்பு வெளியிட தயாராக உள்ளது.
மூன்றாவது தொகுப்பு முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தொகுப்புக்கென தோழர்கள் ஷியாமளா, உமா மகேஷ்வரி, புனிதா, கவியாழினி, நாகினி, ஆவாரம்பூ, தாரகை, புலமி, சாந்தி ,சுதா ,கோமு என பெண்மணிகள் படைப்புகளை அளித்துள்ளனர். பாராட்டுகிறோம்.
தோழமை நெஞ்சங்களுக்கு ஓர் வேண்டுகோள் கீழே அளிக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் மூன்றினை முதல் இரண்டு மூன்று என தெரிவு செய்து தங்கள் கருத்து
கங்கையின் பிரவாகமாய்
மங்கையெனுள் ஊற்றெடுத்த
சங்கத்தமிழ் சொல்லெடுத்துப்
பொங்கிவரும் கற்பனையால்
தங்கமென வார்த்தெடுத்துப்
பங்கமின்றி கவிவடித்து
இங்கிதமாய் இசையமைத்து
சங்கதிகள் அதில்கூட்டி
மங்கியதோர் நிலவொளியில்
வங்கக்கரை மணல்வெளியில்
திங்களும் வாழ்த்துரைக்க
சிங்காரமாய் பாடுகையில்
பொங்குகடல் அருகில்வந்து
சங்கீதம் ரசித்தவழகை
வங்கணத்தி என்சொல்வேன் ......???
(வங்கணத்தி - உற்ற தோழி )
மரம் -மனிதன்
(ஒரு நேர்காணல் )
மனிதன் -------------மரமே,!
பரிணாம் வளர்ச்சியின் முதல் அறிவே!
நலம் தானே?
மரம்------
சில சமயம் நலம்.
மனிதன் -------------- அது எப்படி உன்னால் மட்டும்
எது நடந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடிகிறது?
மரம்---------------------------- நாங்கள் பூமிதேவியின் கருவில் இருந்து
ஜெனிப்பவர்கள்…….
தாய் குணம் தானே எங்களுக்கும்
இருக்கும்!
மனிதன் -------------- சரி சரிதான்,
காவியா,
அம்மா…….காவியா?
எங்கடா இருக்க?
வினாவினை தொடுத்த வாரே சதாசிவம் உள்ளே நுழைந்தார்.
என்னப்பா?
பயங்கர சந்தோஷமா இருக்கீங்க போல……….
ஆமாம் டா !,.நல்ல விஷயம் தான், .இப்பதான் தரகர் போன் பண்ணார்.உனக்கு ஏத்த நல்ல வரன் பாத்துட்ட தாகவும் ,இப்பவே ஃஅந்த பையனின் போட்டோ வோட வருவதாகவும் சொன்னார்.அதான்.
என்னடா…….
ஒன்னும் பதிலே பேச மாட்டீங்கிற?
இல்லப் பா, இவ்வளவு சீக்கிறமா உங்கள விட்டு போகனுமா?நானும் போயிட்டா யாருப்பா உங்கள பாத்துக்குவா?
என்னால உங்கள விட்டு போக முடியாது.கண்களில் கண்ணீர் மெல்ல எட்டி பார்க்கும் நிலையில் காவியா தழுதழுத்த குரலில் சொன்னாள்.
என்னடா!
அப்பா உயிரோட இருப்பதே
முண்டாசு பாகைக்குள்
முரண்பாடாய்
இருப்பவனே !
முறுக்கு மீசையின்
முதல் அத்தியாயமே ..............
எல்லோருக்கும்
முத்தமிழ் தெரியும் !
உனக்கோ
நான்காவது தமிழ் தெரியும்
அது
கோபத்தமிழ்!
ஆத்திரக்கரனுக்கு
புத்தி மட்டு என்பதை
பொய்ப்பித்தவன் நீ !
ஆத்திரம் கொண்டு
அனலாய் மாறினால்
அடங்கி போகும் அட்டுழியம்
என்பதை
மெயப்பித்தவன் நீ !
பாரதியே
மீண்டும் வா .........!
இன்னும் மாறவில்லை
சமுதாயம்
செத்துக்கொண்டு இருக்கிறது
சமதர்மம் !
வா
உன் கவி நாவால் சுடு !
சில நயவஞ்சகர்கள்
நாசமாய் போகட்டும் !
பூரித்து போகதே !
நான் கண்ட
பெண் சுதந்திரம்
கிடைத்து விட்