Thanga Arockiadossan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Thanga Arockiadossan
இடம்:  avadi...chennai 600054
பிறந்த தேதி :  07-Oct-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2011
பார்த்தவர்கள்:  1138
புள்ளி:  462

என்னைப் பற்றி...

samuthaya sinthanaiyalan.............

என் படைப்புகள்
Thanga Arockiadossan செய்திகள்
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 10:45 am

கவலை மனதை அறுத்தாலும்
தடைகள் வழியை மறித்தாலும்
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும்
வறுமை வறுத்து எடுத்தாலும்
பிணியும் விடாது வதைத்தாலும்
மதியும் குழம்பித் தவித்தாலும்
படிப்பில் கவனம் சிதைந்தாலும்
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும்
எழுத்தில் லயித்தால் சுகமேதான் ...!!!

மேலும்

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ...!!! 11-Nov-2014 3:08 pm
நன்றி குமரா !! 11-Nov-2014 3:07 pm
நன்றி புனிதா ! 11-Nov-2014 3:07 pm
எழுத்தும் தெய்வம் இந்த எழுது கோலும் தெய்வம் என்ற பாரதியின் வரிகள் கண் முன்னே காட்ச்யாக 10-Nov-2014 11:06 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 10:46 pm

நீலவான வெண்ணிலவே நீராட வந்தாயோ
ஓலமிடும் ஆழியில் ஒற்றையாய் - கோலயெழில்
பொன்மேனி மின்னிட பூரித்து மேலெழுவாய்
மென்னடை போட்டு மகிழ்ந்து !

மேலும்

அழகான வாழ்த்துக்கு நன்றி !! 17-Nov-2014 12:23 pm
அழகான படத்திற்கு அழகு மிகு வரிகள் ... அருமையான கற்பனை. வாழ்த்துக்கள் . 17-Nov-2014 9:27 am
நன்றிம்மா..... !! 15-Nov-2014 8:48 am
neeraadum வெண்ணிலவின் ஏகாந்த alagil malzaiyum nandhadhinge........!! alagu ammaa......! 13-Nov-2014 3:33 pm
Thanga Arockiadossan - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2014 3:30 pm

இந்த பூக்களை zoom பண்ணி பார்க்கவும் ..

மேலும்

வாவ்.......சூப்பர் தோழி...! 11-Nov-2014 1:10 pm
நிர்வாண பூக்கள் ... கற்பனைக்கு கைதட்டல்கள் .. சிந்தனைக்கு வணக்கங்கள் 11-Nov-2014 10:56 am
பூம் பாவைகள் கண்கொள்ளா காட்சி 11-Nov-2014 8:37 am
பிரமித்தேன் .....! அற்புதம் .....! 10-Nov-2014 10:58 pm
C. SHANTHI அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 8:15 pm

கடனாளியாகவே இரு....
======================

உனக்கும் எனக்கும்
இடையேயான
அன்பு பரிவர்த்தனைகள்
மனப் பதிவேடுகளில்....

கணக்குகளை சரிபார்க்கிறேன்
சமன் செய்ய முடியவில்லை..

நீ திரும்ப செலுத்தாததால்
உன் கணக்கில் சொச்சம்...

திரும்ப செலுத்திவிடாதே
பற்றாய் வைத்துக் கொள்கிறேன்
கடன் கணக்கில் நிரந்தரமாய்...

அடுத்த பிறவியில்
கடனை வசூலிக்க
என் கணக்கில்
இனி ஜென்மமில்லை
நான் கடைசி பிறவியில்...

என்றாவது ஒரு நாள்
என் இறப்பு செய்தி
உன் செவி எட்டலாம்

அன்று
எனக்காக நீ
ஒரு துளி கண்ணீர் சிந்து
கணக்கு தீர்ந்துவிடும்...

மேலும்

இந்த பெயரை உச்சரிக்க நான் திணறமாட்டேன். எவ்வளவு இனிமையான பெயர். 11-Nov-2014 8:31 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே. 11-Nov-2014 8:28 pm
கடன் பட்டுக் கிடப்பதும் மனதிற்கு இன்பமே ! நல்ல வரிகள். நல்ல உணர்வு !! 11-Nov-2014 5:43 pm
மிக மகிழ்ச்சி அக்கா.. எனக்கே என் பெயர் மிகவும் பிடிக்கும் சிலர் உச்சரிக்க திணறுவதால். யாழினி என்ற பெயரும் அழகாக உள்ளது. 11-Nov-2014 9:25 am
Thanga Arockiadossan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 1:19 am

அன்பே .......!
உன்னை கண்ணில் வைத்து
என்னை
உன்னில் வைத்தேன்

சின்ன சின்ன
தொடுதல்களில்
தொட்டு மகிழ்ந்து
என்னை உணர்ந்தேன் ...!

உன்
உதட்டுப் புனகையை
உண்மை என உணர்ந்து
என்னை கொடுத்தேன்

அது உன்
உதட்டுச் சாயம் போல்
ஒன்றும் இல்லாமல்
போனதால்

என்னை தொலைத்தேன்
அன்பே ...........
நான் ...
என்னை தொலைத்தேன் ...!

மேலும்

வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி நண்பரே 10-Nov-2014 10:39 pm
வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி நண்பரே 10-Nov-2014 10:38 pm
உன் உதட்டுப் புனகையை உண்மை என உணர்ந்து என்னை கொடுத்தேன் அது உன் உதட்டுச் சாயம் போல் ஒன்றும் இல்லாமல் போனதால் அழகிய வரிகள் தோழரே... அருமை... 10-Nov-2014 1:28 am
Thanga Arockiadossan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 12:49 am

தோழா......!

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி
மனம் சோர்ந்திடாமல் இருப்பதே
சிகரத்தை தொட சிறந்த வழி ...

காற்றுக்கு தடை யார் போடுவது - உன்
சிந்தனைக்கு வேலி யார் இட்டது ...?-தோழா ...!
உரத்த சிந்தனையால் உலகை புரட்டிப் போடு
தன்னம்பிக்கை சிறகை விரித்து இத்
தரணிக்கு உன்னை உணர்த்து ....

வித்தின் ஓட்டப் பந்தயத்தில் ஓடி
தாயின் கருப்பையில் ஜெனிததவனே
நிழலில் நீ இளைப் பாருவதை விட - பலர்
தங்க நிழல் தரும் மரமாய் இரு .......

பாறையானவனே... .! உளியின் ஒத்தடத்தில்
உன்னை பதியன் போடு ! புடம் போடப் போட
மெருகேறும் தங்கத்தின் தரம் போல் - இத்
தரணிக்கு உன்னை உணர்த்த தடைகளை தாங்கிக் கொ

மேலும்

இது கொஞ்சம் ஓவர்தான். கவி அரங்கிற்கு வர முயற்சிக்கிறேன். நீண்ட தொலைவு. யோசிக்க வைக்கிறது. வாழ்த்திற்கு மிக்க நன்றி. 10-Nov-2014 11:00 pm
வந்திருந்தாள் ...! கண்டிப்பாக உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைத்திருக்கும் .....! அடுத்த மாத கவியரங்கிற்கு வர முயலுங்கள் ....! பரிசுபெற வாழ்த்துக்கள் 10-Nov-2014 10:54 pm
கவி அரங்கினில் வாசிக்கப் பட்ட கவிதையோ?? என்னையும் அழைத்திருந்தார்கள் நண்பரே. எனக்குத்தான் வர நேரமில்லை. //அன்புச் சங்கிலியில் மனித உணர்வுகளை பிணைத்து மனிதத்தில் ஏறி வானம் தோடு ..! வானம் உன் வசப் படும் ..// தோடு = தொடு உண்மைதான் அன்பு சங்கிலியால் மனிதம் நிறைந்த மனிதர்களை கோர்க்கலாம். வானத்தையும் வசப்படுத்தலாம். . தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் அருமை. 10-Nov-2014 10:49 pm
நன்றி நண்பரே 10-Nov-2014 10:39 pm
Thanga Arockiadossan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 11:05 pm

அன்பே
உன்னை
வாசிக்க
நான்
யாசித்தேன்

திறந்த
புத்தகமான
உன்னை
சுவாசிக்க
இன்று
யோசிக்கிறேன்

திறந்த
வெளிப்
புல்வெளியே
உனக்கு
வேலிப்
போடும் முன்னே

உன்னை
வேட்டையாடியது
யார் ..?

அன்பே
நீ
யோசிக்காதே
வாசிக்க
யாசகமாக வா ...................

மேலும்

கண்டிப்பாக கவனிக்கிறேன் ஆசை அஜித் 05-Nov-2014 6:28 am
வருகைக்கும் ..! வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே ....! 05-Nov-2014 6:27 am
பணியின் காரணமாக வரமுடியவில்லை கருத்துக்கு நன்றி நண்பரே 05-Nov-2014 6:26 am
நன்றி நண்பரே 05-Nov-2014 6:25 am
Thanga Arockiadossan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 10:33 pm

குடும்ப கூட்டுக்குள்ளே மரமாய் இருந்திட்டாள்
உறவுக் கிளையாய் வளர்ந்து அன்பை பகிர்ந்திட்டாள்
சமுதாயம் தழைக்க கனிகளை தந்திட்டாள் - கட்டியவனுக்கு
காதலை தந்து காலமெல்லாம் காத்திட்டாள் ............!

வளர்ந்த கிளையில் இருந்த பறவைகள் கனிகளை
தின்று வேரு மரத்துக்கு தாவிப் பறந்தன -கட்டியவனோ
காலத்தால் கவரப் பட்டு காணாமல் போனான்-சதையும்
ரத்தமுமாய் தழைத்து வாழ்ந்தவள் இன்று தளர்ந்து போனாள்

தள்ளாத வயதினிலே தடுமாறி தடுமாறி
தளர்ந்துப் போன தாயவளும் தவமாய் கிடக்கின்றாள்
தவிக்கவிட்டுப் போன தங்க மக்களும் ஒரு நாள்
தளர்ந்துப் போய் தவிக்கும்போது தாவி அணைத்து
தங்க மடி தந்து தாங்கிப் பிடித்திடவே..

மேலும்

கவிதைக்கு வாழ்த்துக்கள் கருத்துக்கு நன்றிகள் 05-Nov-2014 6:30 am
வருகைக்கு நன்றி நண்பரே 05-Nov-2014 6:29 am
நன்றி நண்பரே 05-Nov-2014 6:29 am
இன்றைய சமூகத்துக்கு தேவையான பதிவு. மிக அருமை. 03-Nov-2014 7:00 am
Thanga Arockiadossan - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

மேலும்

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 31-Oct-2015 11:21 am
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே சுகுமார் 16-Sep-2014 9:43 am
இன்றுதான் முடிவுகளை கண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சுகுமார் 16-Sep-2014 9:41 am
திரு மெய்யன் நடராஜ் திரு பொள்ளாச்சி அபி திரு கே.எஸ்.கலைஞானகுமார் திருமதி சியாமளா ராஜசேகரன் செல்வி கார்த்திகா AK திரு கண்ணதாசன் முனைப்பூட்டும் பரிசு திரு நுஸ்கி முஇமு திரு சுகுமார் திரு தங்க ஆரோக்கிய ராஜ் திரு குமரிப்பையன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....!! 04-Sep-2014 12:43 pm
Thanga Arockiadossan - ஆசான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2014 5:51 pm

என் பெயர் பணம்
நானென்றால் அனைவர்க்கும் மனம்
நான் தேவைக்கு மீறினால் கனம்
பிறகு வருந்த வேண்டும் தினம்
என்னை கொடுத்துபார் தானம்
பிறகு அடைந்துடுவாய் ஞானம்

நாடு முழுவதும் என் பாய்ச்சல்
வீடு முழுவதும் என் காய்ச்சல்

நான் பிறந்தது ரிசர்வ் பாங்கில்
என்னால் பலர் இருப்பது சென்ட்ரல் ஜெயிலில்

தேச தந்தை என் profile picture
தேச துரோகிகள் என்னால் out of the picture

சூதாட்டத்தில் மறைவேன் பொய்யாக
தொண்டாற்றுவதில் உதவுவேன் மெய்யாக

நான் விரும்புவது நாட்டில் முன்னேற்றம்
அதை பார்க்கவிடாமல் அரசியல் ஏமாற்றும்

அரசியல்வாதிகள் கையில் இருந்தால் நான் கருப்பு
ஏழைகள் கையில் இருந்தால் அது

மேலும்

சூப்பர் 13-Aug-2014 3:03 pm
Thanga Arockiadossan - சிவநாதன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 9:44 pm

தங்கம் ஆகிய "த"கரம்

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

முற்றிலும் "த"கர எழுத்துக்களை மட்டும் கொண்டு எழுதப்பட்ட வெண்பா.காளமேகப் புலவரின் வார்த்தை விளையாட்டின் விளக்கம்

வண்டே,

தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்

தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்

துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த (...)

மேலும்

நான் பதிவிட எண்ணிய வெண்பாக்களில் இதுவும் ஒன்று..நீங்கள் செய்ததில் பெருமகிழ்ச்சி தொடரட்டும் தமிழ் சுவை.. 01-Oct-2014 7:59 am
உண்மைதான் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா 14-Jul-2014 10:31 pm
அருமையான வெண்பா இதை அப்படியே தினமும் சொல்லி பழகிக் கொண்டால் நாவும் சொல்லும் மனமும் மணக்கும் ...! நன்றி ஐயா ...! 12-Jul-2014 8:22 am
Thanga Arockiadossan - kirupa ganesh அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 6:25 am

கோப உணர்வு சராசரியாய் எவ்வளவு நேரம் இருக்கும் ஒரு மனிதனிடம் ?

மேலும்

அடுத்த கோப உணர்வு வரும் வரை .. .. 29-Apr-2014 12:07 am
விளைவுகள சில நல்ல உறவுகளை இழக்க வேண்டி வரலாம், தற்காலிகமாகவும் அல்லது நிரந்தரமாகவும் ! 28-Apr-2014 10:53 pm
நல்ல கருத்து பண்பட்ட மனதில் கோபம் இருக்க கூடாது . மனைவியை மட்டும் ஒரு கை பார்க்கும் கணவன்மார்கள் அதிகம் அன்பின் வெளிப்பாடு தான் என்றாலும் வாழ்க்கை தொலைகின்றது என்பதை சிந்திக்க வேண்டும் உரிமை எங்கு உள்ளதோ அங்கு ஆதிக்கம் நன்றி அதிகம் 28-Apr-2014 7:47 pm
பண்பட்ட மனதில் கோபம் இருக்காது புண் பட்ட மனதில் அந்த ரணம் ஆறும் வரை உறவுகளால் கோபம் வந்தால் ஒரு சில நிமிடங்கள் மட்டும் தெரியாத மனிதரிடமிருந்து கோபம் வந்தால் அந்த உருவம் மறையும் வரை மனைவியிடம் கோபம் வந்தால் அவள் சிரிக்கும் வரை பிள்ளைகளிடம் கோபம் வந்தால் ஒரு சில நிமிடங்கள் காதலியிடம் கோபம் வரவேக் கூடாது 28-Apr-2014 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

sivagiri

sivagiri

திருவண்ணாமலை
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

இவர் பின்தொடர்பவர்கள் (36)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (36)

maniyan

maniyan

chennai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே